‘டிடி’ விவாகரத்து.! சீரியல் நடிகருடன் ரகசிய காதலா.? நடிகர் ஓபன் டாக்.!

0
16531
DD

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி. 3 வருடங்களே நீடித்த இவர்களது திருமண வாழக்கை 2017 ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்துவருகிறார் டிடி.

dd

- Advertisement -

விவாகரத்திற்கு பின்னர் இரண்டாம் திருமணம் குறித்து எந்த பேச்சையும் எடுக்காமலிருக்கும் டிடி, இந்நிலையில் டிடி, மிதுன் என்ற நபரை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

டிடி காதலிப்பதாக கூறப்படும் மிதுன் வேறு யாரும் இல்லை. டிடி தொகுப்பாளினியாக பணிபுரியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ‘பகல்நிலவு’ தொடரில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதுகுறித்து மிதுன் பேசுகையில்’டிடி எனக்கு அக்கா போன்றவர், அவரை நான் அவரை எப்போதும் அக்கா என்று தான் கூப்பிடுவேன்.

-விளம்பரம்-

dd

நாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன், அதனை யாரோ எடுத்து யூடுயூபில் வெளியிட்டு நானும் , டிடியும் காதலிப்பதாக புரளியை கிளப்பியுள்ளார். இதனை யாரும் நம்பாதீங்க ‘ என்று டிடியுடன் உண்டான காதல் கிசுகிசுவிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மிதுன்.

Advertisement