சமையல்காரர் வராததால் வீட்டில் சமைத்த மணிமேகலை,வெடித்த குக்கர். வைரலான வீடியோ.

0
64121
manimegalai
- Advertisement -

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார். மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் குக்கர் வெடித்து சிதறி சமையலறையே அலங்கோலமாக உள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : ஒருவழியாக முடிவானது திரௌபதி படத்தின் ரிலீஸ் தேதி. குஷியில் ரசிகர்கள்.

மணிமேகலை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ அவரது கணவர் உசைன் எடுத்து உள்ளார். இது குறித்து அந்த வீடியோவில் மணிமேகலை கூறியிருப்பது, எங்கள் வீட்டில் இன்று சமைக்காரர் வரவில்லை. அதனால் உடலுக்கு ஆரோக்கியமாக நாமே சமைக்கலாம் என்று முடிவு செய்தேன். இரண்டு டம்ளர் அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை வைத்தேன். குக்கர் எப்படி வெடிச்சது என்று எனக்கு தெரியல? எனக்கு இப்ப தெரிஞ்சாகணும், என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது? நமக்கு வராத விஷயத்தையும் ட்ரைப் பண்ணி நான் பண்ணி இருக்கேன். ஆனால், இந்த குக்கருக்கு என்ன தெரியம்.

-விளம்பரம்-
https://www.instagram.com/tv/B8tQx7xnaA6/?utm_source=ig_web_copy_link

ஐயோ, நான் குக்கர் கிட்ட மட்டும் இருந்தா என்ன ஆகி இருக்கும். இந்த மாதிரி நேரத்துல எனக்கு உதவி பண்ணாம வீடியோ எடுக்கிற இந்த உசேன் மாதிரி ஆளுங்கள வச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது. அட்லீஸ்ட் ஒரு வருடத்துக்கு சமையல் பக்கமே போகவே கூடாது. வீடு புள்ள கிளீன் பண்ணறது கூட எனக்கு கஷ்டமா இல்ல. நான் மேக்கப் இல்லாம இருக்கும் போது வீடியோவ எடுக்கிறது தான் மனசுக்கு வருத்தமா இருக்கு என்று கூறியிருந்தார்.

Advertisement