வைரமுத்து சர்ச்சை ! நாக்கை அறுத்தால் 10 கோடி அறிவித்த பிரபலம் ?

0
2215
vairamuthu-issue
- Advertisement -

கவிப்பேரரசு வைரமுத்து மீதான இந்துத்துவாவின் வன்மங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வைமுத்து பேசிய ஆண்டாள் என்னும் தமிழ் கவிஞரை தற்போது தான் பல இந்துக்களுக்கே தெரியும் என்ற நிலையில் தற்போது அவர் மீதான வன்மங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

Vairamuthu

- Advertisement -

ஆண்டாள் குறித்த பேச்சு யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஏற்கனவே வைரமுத்து கூறியுள்ள நிலையில். பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவ வெறியாட்ட பேச்சுக்கள் அதிகரித்துள்ளது.

இந்த வெறிப்பேச்சுகளை எல்லாம் ஆரம்பித்து வைத்த, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இதனை அரசியலாக்கி குளிர்காய்ந்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்தை கண்டித்து நெல்லையில் நடைபெற கூட்டத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சுகளை பேசியுள்ளார்.

-விளம்பரம்-

ADMK-Nainar-Nagendran

வைரமுத்துவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி தர தொண்டர்கள் தயாராக உள்ளனர் என பேசினார். ஆனால் யார் அந்த தொண்டர்கள், யாருடைய தொண்டர்கள் என குறிப்பிடவில்லை. இதனால் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Advertisement