தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இது தான் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்த முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நடித்திருந்தார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘தல’ அஜித்தின் ‘மங்காத்தா’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘உத்தம வில்லன், விஸ்வரூபம் 1 & 2’, ஜீவாவின் ‘என்றென்றும் புன்னகை’, சுந்தர்.சி-யின் ‘அரண்மனை’, சிம்புவின் ‘இது நம்ம ஆளு’, விஷாலின் ‘துப்பறிவாளன்’, தனுஷின் ‘வடசென்னை’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ஆண்ட்ரியா.

Advertisement

தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக மலையாளத் திரையுலகிலும் நுழையலாம் என்று முடிவெடுத்தார். மலையாளத்தில் ‘அன்னையும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹம், தொப்பிள் ஜொப்பான்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. இவர் கமலுடன் நடித்த ‘விஸ்வரூபம் 1 & 2’ ஆகிய இரண்டு படங்களுமே ஹிந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு பிரபல பின்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. ‘நீ சன்னோ நியூ மூனோ, ஏக் தோ தீன், மாமா டவுசர், கூகுல் கூகுல்’ போன்ற பல பாடல்களை பாடியிருக்கிறார். நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா ‘லாக்டவுன்’ என்ற குறும்படத்தில் நடித்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இந்த ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் இக்குறும்படத்தை ஐபோனில் ஷூட் செய்திருக்கிறார்களாம். பிரபல நடிகர் ஆதவ் கண்ணதாசன் இந்த குறும்படத்தினை இயக்கியிருக்கிறார். நித்தின் ராம் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இதற்கு கார்த்திக் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இக்குறும்படத்தை நாளை (ஏப்ரல் 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளனராம்.

Advertisement
Advertisement