விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடிப்பது இவரா..! யார் தெரியுமா..?புகைப்படம் உள்ளே.!

0
379
Visuvasam-Ajith
- Advertisement -

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். அதுபோக தற்போது அஜித்துடன் ஏற்கனவே நடித்த ஒரு சிறு நடிகையும் இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளாராம்.

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கும் மகளாக நடித்த பேபி அனிகா, தற்போது “விசுவாசம் ” படத்தில் மீண்டும் அஜித் மகளாக நடித்துள்ளாராம். ஏற்கனவே , இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது அஜித் மகளாக பேபி அனிகா நடித்திருப்பதால்கே, இந்த படத்தில் அப்பா மகள் சென்டிமென்டை சிவா கையில் எடுத்துள்ளாரா என்று எண்ணம் எழுகிறது. ஏனெனில் இயக்குனர் சிவா , அஜித்தை வைத்து எடுத்த வீரம் படத்தில் சகோதரர் செண்டிமெண்ட், வேதாளம் படத்தில் தங்கச்சி செண்டிமெண்ட் என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

baby-anikha

anikha-

சத்யஜோதி பிளம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஏற்கனவே காமெடி நடிகர்களான விவேக், தம்பி ராமையா,ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். நயன்தாரா இந்த படத்தில் மருத்துவராக நடித்துள்ளார். மேலும், இந்த படம் மதுரையை பின்னணியாக கொண்ட கதைக்களமாக உருவாகி வருகிறதாம்.

Advertisement