சம்மர் ட்ரிப், ரசிகர்கள் எதிர்பார்த்த புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்த குட்டி நயன் அனிகா.

0
2030
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். விஸ்வாசம் படத்திற்கு பின்னர் பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று தான் கூறி செல்லமாக அழைத்து வருகின்றனர்.

- Advertisement -

புட்ட பொம்ம :

இந்நிலையில் அனிகா தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்துள்ள படம் புட்ட பொம்மா. இப்படம் மலையாளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுவெளியான கப்பேலா என்ற படத்தின் ரீமேக்காகும். இந்நிலையில் புட்ட பொம்ம படம் கடந்த 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அனிகா சுரேந்தர் பிரபலமாகியிருக்கிறார்.

லிப் லாக் காட்சியில் அனிகா :

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் உருவாகி இருந்த ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போது லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தார் அனிகா. இதனை பார்த்த ரசிகர்கள் அனிகா மலையாளத்தில் முதல் படத்திலேயே நயன்தாராவை மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது என்றும், ட்ரைலரிலேயே இப்படி என்றால் படத்தில் எப்படியோ என விமர்சித்து வந்தனர்.

-விளம்பரம்-

விமர்சனங்கள் குறித்து அனிகா :

இதுகுறித்து அனிகா கூறுகையில் `நான் நடித்துள்ள “ஓ மை டார்லிங்” படத்தில் வரும் முத்தக்காட்சியை தவிர்க்க முடியாது. என்னிடம் கதை சொல்லும் போதே அதில் வரும் முத்த கட்சியின் முக்கியத்துவத்தை என்னிடம் கூறினார் இயக்குனர். கதைக்கு அந்த காட்சி தேவை பட்டதால் நான் நடித்தேன். அந்த காட்சியில் ஆபாசம் என்பதர்க்கு இடம் கிடையாது, அது படம் வெளியான உடன் உங்களுக்கே தெரியும் என்று கூறினார். இருந்தாலும் முதல் படத்திலேயே இப்படி பட்ட காட்சியில் நடிப்பதா? என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இன்ஸ்டா புகைப்படங்கள் :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருந்தார். அப்போது அங்கே எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அந்த வகையில் இவர் சமீபத்தில் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். மேலும்,விரைவில் பீச் உடையில் புகைப்படங்களை போட்டாலும் ஆச்சரியமில்லை என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது முதன் முறையாக படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement