முதன் முறையாக தனது காதலி குறித்து பேசிய அனிருத்.! நீங்க நினைக்கற மாதிரி இல்ல.!

By Rajkumar · 21/2/2019

இசையமைப்பாளர் அனிருத் தற்போது உள்ள இளைஞர்களின் ட்ரெண்டிற்கேற்ப பாடல்களை கொடுத்து பலரது அபிமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவரது மெலோடி பாடல்கள் குத்து பாடல்கள் என்றாலும் சரி அனைத்துமே ஹிட் தான். 

மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும் . அதனால் தான் இவருக்கு பேட்ட படத்தில் கூட இசையமைப்பாளராகும் வாய்ப்பும் கிடைத்தது. இசையமைப்பாளரையும் தாண்டி இவரை அனைவரும் பிலே பாய் என்று தான் சொல்கின்றனர்.

இதையும் பாருங்க : அனிருத்துக்கு இவ்ளோ அழகான அக்கா இருக்காங்களா..? யார் தெரியுமா..?

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அதே போல பீப் பாடல் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான இவரது அந்தரங்க வீடியோ வரை இவர் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்.

இதெல்லாம் சரி தற்போது 28 வயதாகும் அனிருத்துக்கு காதலி இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகமாக இருக்கிறது. இதுகுறித்து அனிருத்துடன் கேட்டால், ரொம்ப நாளாகவே சிங்கிளாக தான் இருக்கிறேன், இசையமைப்பாளராக ஆவதற்கு முன் காதலித்தேன். இப்போது உள்ள வேலையில் காதலிப்பது என்பது சரியாக இருக்காது, அதற்காக இப்படியே இருக்க மாட்டேன் விரைவில் கமிட் ஆகிவிடுவேன் என்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full