காபி கேட் சர்ச்சையில் அனிருத்தை பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருந்தார்.

பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரின் மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். அனிருத் இசையமைத்தாலே அந்த பாடல் ஹிட் தான் என்றாலும் அது காபி சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையான ஒன்று தான்.
அனிருத் காபி சர்ச்சை:
ரஜினியின் 'பேட்ட' படம் வெளியான போது அந்த பாடல் சாமி பாடலில் இருந்து சுடப்பட்டது என்று சர்ச்சை எழுந்தது. அதே போல விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடல் அனிருத் இசையமைத்த Zomatto Ad போல இருந்தது, விக்ரமின் தீம் சாங், பத்தல பத்தல பாடல் குண்டக்க மண்டக்க படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் சுடப்பட்டது என்றும் அவர் இசையில் வந்த பல பாடல்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.

தேவாரா படம்:
இந்த நிலையில் மீண்டும் காபி கேட் சர்ச்சையில் அனிருத் சிக்கி இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள 'தேவாரா' என்ற படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

அனிருத் இசையில் பாடல்:
மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இதுதான் இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் முதல் படம். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், நரேன் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய முதல் பாடல் 'ஃபியர் சாங்' ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தது.
ivan innum thirundhala maamaa pic.twitter.com/vNMvMJwtb3
— lovedalecowball (@saambumavane) August 5, 2024
நெட்டிசன்கள் ட்ரோல்:
இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'பத்த வைக்கும் பார்வைக்காரா' வெளியாகியிருந்தது. இதில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் இருவரின் கெமிஸ்ட்ரியும் வேற லெவலில் இருக்கிறது. இந்நிலையில் இந்தப் பாடலை தான் நெட்டிசன்கள் காபி கேட் என்று விமர்சித்து வருகிறார்கள். காரணம், ஸ்ரீலங்கன் பாடலான 'மனிக்கே மகே..' என்ற பாடலின் டியூனை காப்பியடித்து தான் இந்த தேவாரா படத்தின் இரண்டாவது பாடலில் அனிருத் பயன்படுத்தி இருக்கிறார் என்று இரண்டு பாடலையும் கம்பர் செய்து பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.






