பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து. இதனால் படத்திற்கு ஒரு இலவச ப்ரமோஷன் கிடைத்திருந்தது. இருப்பினும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ,இந்த படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மோகன் இழிவுபடுத்தி கூறியுள்ளார் என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்துதான் வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கு பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் ஆதரவு தெரிவித்ததாக ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆனது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் கூட நடித்து வருகிறார். சமீபத்தில் அனிதா சம்பத் ட்விட்டர் பக்கத்தில் திரௌபதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், பெரிய நடிகர்கள் இல்லை, அதிக பணம் இல்லை, Media Support இல்லை,அரசியல் தலைவர்கள் துணை இல்லை திரௌபதி

Advertisement

இவை அனைத்தும் இருந்த ஜிப்ஸி திரௌபதியிடன் மண்ணை கவ்வுகுறது, அதுவும் சென்னையில் சாதித்து விட்டீர்கள் என்று கூறிபிடப்பட்டிருந்தது. இந்த டீவீட்டை கண்ட திரௌபதி இயக்குனர் மோகனும், அனிதா சம்பத்திற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது அனிதா சம்பத் பெயரில் இயங்கி வரும் போலி கணக்கு என்று. இதனை அனிதா சம்பத்தே தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் திரௌபதி பட இயக்குனருக்கு அனிதா சம்பத் ட்வீட் ஒன்றை மீண்டும் செய்துள்ளார்.

அதில், sir romba sorry..நான் இன்னும் திரௌபதி படம் பாக்கவே இல்ல..என்னுடைய fake accountல வந்த விமர்சனத்துக்கு தான் நன்றினு பதில் பதிவு போட்டு இருந்திங்க.. அது என் போலி ட்விட்டர் கணக்கு என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த மட்டுமே இதை பதிவிடுகிறேன் sir..நன்றி படம் பாத்துட்டு கண்டிப்பா கருத்து சொல்கிறேன் சார் நன்றி என்று பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத்.

Advertisement

Advertisement
Advertisement