குழந்தைகளை வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு அனிதா விஜயகுமார் கூறியிருக்கும் அறிவுரை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
அதேபோல் விஜயகுமாரின் மகன், மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். சமீபத்தில் விஜயகுமார் நடித்த ரத்னம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார். மேலும், விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா.
அனிதா விஜயகுமார் குறித்த தகவல்:
மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார். அருண் விஜய்யின் அக்கா கவிதா சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
அனிதா குடும்பம்:
திருமணம் ஆனவுடன் இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் செட்டில் ஆகி இருந்தார்.
தற்போது இவர் தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். மேலும்,
சில மாதங்களுக்கு முன்பு தான் இவருடைய மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இதனால் இவரிடம் குழந்தை வளர்ப்பு குறித்து அறிவுரை கேட்டிருக்கிறார்கள். இதற்கு அனிதா விஜயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அனிதா பதிவிட்ட வீடியோ:
அதில் அவர், குழந்தை வளர்ப்பு குறித்து ஒரு நிமிடம் வீடியோவில் சொல்ல முடியாது. ஆனால், ஒரு சில விஷயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான் இந்த வீடியோவை வெளியிட்டேன். எல்லா பெற்றோர்களுக்குமே தங்களுடைய குழந்தைகளை சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். நமக்கு கிடைத்ததை விட தரமான கல்வி, உடை என அனைத்தும் நம்முடைய குழந்தைக்கு அமைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக எல்லா பெற்றோர்களும் கஷ்டமும்படுகிறார்கள். ஆனால், நீங்கள் குழந்தை சந்தோஷமாக இருக்க நினைத்தால் அவர்கள் கேட்கும் அனைத்தையும் தயவுசெய்து வாங்கி கொடுக்காதீர்கள்.
குழந்தை வளர்ப்பு குறித்து சொன்னது:
அவர்கள் கேட்கும் எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் கேட்பது வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். சந்தோஷம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இதனால் அவர்கள் மெண்டல் டிப்ரஷன் கொண்டு போய் சேர்க்கும். அதை மனதில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தேவையானது மட்டும் வாங்கிக் கொடுங்கள். எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. குறிப்பாக குழந்தைகளிடம் இல்லை என்று சொல்லி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.