விஜயகுமார் குடும்பத்தில் மேலும் ஒரு டாக்டர். யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

0
149
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. விஜயகுமார்-மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார்.

- Advertisement -

விஜயகுமார் குடும்பம்:

அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார். மேலும், அருண் விஜய்யின் அக்கா கவிதா அவர்கள் சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கவிதாவின் முதல் பொண்ணு தான் ஹாசினி. இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் இவர் ஒருவர் மட்டும் தான் சினிமாவை தேர்ந்தெடுக்காமல் மருத்துவத்தை தேர்வு செய்து டாக்டாக்டரானவர் என்பது குறிப்பிடத்தக்து. இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் அனிதா. இப்படி ஒரு நிலையில் அனிதாவின் மகன் ஸ்ரீஜெய் கோகுல் மருத்துவபடிப்பை முடித்து தற்போது டாக்டராகி இருக்கிறார். தன்னுடைய மகனின் வீடியோவை ஷேர் செய்த அனிதா ஒரு பெற்றோராக நாங்க இப்போ ரொம்பவே பெருமைப்படுகிறோம். அதோடு எங்கள் குட்டி இளவரசன் இப்போ டாக்டரா மாறிட்டாரு. உங்க கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி’ என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தான் இவரது மகள் தியாவிற்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் வனிதாவை தவிர மற்ற அனைத்து குடும்ப நபர்களும் கலந்துகொண்டனர். அதே போல இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகள் திருமணம் முடிந்த கையேடு தற்போது மகனும் டாக்டாராக ஆகி இருப்பதால் அனிதா விஜயகுமார் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.

Advertisement