அஞ்சலி பருகிய பானம்.! கமெண்டில் கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! அப்படி என்ன செஞ்சார்?

0
2088
anjlai

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார்.

View this post on Instagram

#cocacola #happyweekend

A post shared by Anjali (@yours_anjali) on

இதனால் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார் நடிகை அஞ்சலி, ஆனால் தற்போது கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறிவிட்டார் அஞ்சலி. தனது மெலிந்த உடலை தினமும் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டுவருகிறார் அஞ்சலி.

- Advertisement -

அஞ்சலியின் இந்த புதிய பரிமாணத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களா இப்படி மாறிவிட்டார்கள் என்று அச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சலி கோக் குடித்துக்கொண்டு இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தமிழர்கள் இது போன்ற குளிர் பானங்களை புறக்கணித்து வரும் நிலையில் இது போன்று அஞ்சலி செய்ததால் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement