அச்சு அசல் அப்படியே இளம் வயது ரேவதியை போலவே இருக்கும் ஹாலிவுட் நடிகை. போட்டோவை கண்டு வியக்கும் ரசிகர்கள்

0
1243
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் இவருடைய பூர்விமாக கொண்டவர். பின் நடிகை ரேவதி அவர்கள் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரேவதி அவர்கள் ஹிந்தி, ஆங்கில நடிகை திரைப் படங்களை கூட இயக்கி இருக்கிறார். பின் நடிகை ரேவதி அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி அவர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

அதன் பின் 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாததனால் தான் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மனைவி இதனால் இருவரும் பிரிந்தார்கள் என்றும் கூறுகிறார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்து இருந்தது. இந்நிலையில் நடிகை ரேவதி அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

அந்த குழந்தைக்கு தற்போது 8அல்லது 9 வயது இருக்கும். கடந்த 2018 ஆம் ஆண்டு தனக்கு 5 வயது பெண் குழந்தை இருப்பதாக ரேவதி வயது இருந்தார். அப்போது அவருக்கு வயது 52. பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியலில் கூட இவர் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சமீப காலமாக அழுத்தம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தான் தற்போது வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் ரேவதி சமீபத்தில் திருச்சிற்றம்லம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இலையில் தற்போது சோசியல் மீடியால் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஹாலிவுட் பட நடிகை ஆனா டி ஆர்மஸ் புகைப்படத்துடன் சிறிய வயது ரேவதியின் புகைபடைத்தை ஒப்பிட்டு இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருகின்றனர் என்ற ஒரு பதிவு சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement