ரஜினியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'அண்ணாத்த' படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. உலகமுழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=zyVX8g71TGo
இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் மியூசிக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, நயன்தாரா, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்து உள்ளனர். மேலும், இந்த படத்தில் குஷ்பூ மற்றும் மீனாவின் கதாபாத்திரம் சீக்ரெட்டாகவே இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருந்தது. இந்த ட்ரைலர் மூலம் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினியின் தங்கையாகவும் குஷ்பூ மற்றும் மீனா, ரஜினியின் முறைப் பெண்களாகவும் நடித்து இருக்கின்றனர் என்பது உறுதியாகி இருக்கிறது. அதே போல இந்த படத்தில் 'டாக்டர்' படத்தில் கலக்கிய கிங்ஸ்லியும் இருக்கிறார் என்பது கூடுதல் பிளஸ்





