தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்துடன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. நயன் படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார். இவர் திருச்சியை சேர்ந்தவர். இவருக்கு சின்ன வயதில் இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும். அதோடு இவரிடம் சமைத்து ருசி பார்க்க சொல்வார்கள். இதனால் இவருக்கு சமையல் மீது அதிக ஆர்வம் வந்துவிடும். மேலும், கோயிலில் இவருடைய தந்தை பிரசாதம் சமைப்பவர். இதனால் இவருக்கு அசைவம் பிடிக்காது.

Advertisement

படம் குறித்த தகவல்:

பின் நயன்தாரா தன்னுடைய கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார். இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. இது நயன்தாராவின் 75வது படமாகும்.

அன்னபூரணி படத்தின் மீது புகார்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படம் netflix தளத்திலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாக இருப்பதாகவும் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்று பதிவிட்டு இருந்தது.

Advertisement

தயாரிப்பு வெளியிட்ட அறிக்கை:

அதில், உங்களின் மேற்கூறிய கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். அதில் உள்ளவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, எங்கள் இணை தயாரிப்பாளர்களான எம் இன் இன்டென்ட் ஆர்டிஃபோவுடன் ஒருங்கிணைந்து மேற்கூறிய திரைப்படம் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மேலும், நெட்ஃபிளிக்ஸ் மூலம் படத்தைத் திருத்தும் வரை உடனடியாக அவர்களின் தளத்திலிருந்து அகற்ற சொல்லி இருக்கிறோம்.

Advertisement

ராமர் குறித்த வசனம் :

இந்து மற்றும் பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். நன்றி, ஜீ எண்டர்டமென்ட் எண்டர்பிரைசஸ் என்று கூறி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ராமர் குறித்து வைக்கப்பட்ட ஒரு வசனம் தான் இந்த படத்தின் எதிர்ப்பு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதோ அந்த காட்சி.

Advertisement