பாடகராக களமிறங்கியுள்ள சரத்குமாரின் மற்றொரு வாரிசு. வீடியோ இதோ.

0
66914
Sarathkumar
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்களிலும் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is sarathkumar-radhika-son-rahul-0632020m.jpg

- Advertisement -

நடிகர் சரத்குமார் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரை கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா. இதில் வரலக்ஷ்மி “போடா போடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே போல சரத்குமாரின் இரண்டாம் மனைவி தான் நடிகை ராதிகா. இது அனைவருக்கும் தெரிந்தது தான்.

சரத்குமார் நடிகை ராதிகாவை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகனும் பிறந்தார். இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகாவின் மகன் ராகுல் சினிமாவில் களமிறங்கியுள்ளார். அதுவும் பாடகராக. ஆம், ஸ்ரீகாந்த் தேவா இசையில் ராகுல் ரா சன் டேக் ஆப் என்ற rap பாடலை பாடியுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பாடலை ராகுல் தான் எழுதியுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த 6 ஆம் தேதி இந்த பாடல் வெளியாகியுள்ளது.மேலும், இதுவரை இந்த பாடல் யூடுயூபில் 25 ஆயிரம் வியூஸ்களை மட்டுமே பெற்றுள்ளது. ஏற்கனவே சரத்துமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் சினிமாவில் கலக்கி வரும் நிலையில் தற்போது சரத்குமாரின் மகனும் சினிமாவில் பாடகராக களமிறங்கியுள்ளார். விரைவில் இவர் முன்னணி இசையமைப்பாளர்கள் படத்தில் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement