என் அம்மா அழுதுட்டாங்க, காதல் விவகாரம் குறித்து மனம் நொந்த அனு இம்மானுவேல்

0
609
Anu Emmanuel
- Advertisement -

பிரபல தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுன் தம்பியான அல்லு ஷிரிஷைவை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் அதற்க்கு பதிலளித்திருக்கிறார் நடிகை அனு இம்மானுவேல். நடிகர் விஷால் நடித்திருந்த “துப்பறிவாளன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அனு இம்மானுவேல் இதற்கு முன்னர் சில தெலுங்கு படங்களில் நடித்த அனு இமானுவேல் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்வப்ன சஞ்சாரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக்கினார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ஆக்சன் ஹீரோ பிஜு, மஞ்சி என்ற சில படங்களில் நடித்த இம்மானுவேல் தமிழில் நடிகர் விஷாலுடன் “துப்பறிவாளன்” திரைப்படத்திலும் , நடிகர் சிவகார்த்திகேயனோடு “நம்ம வீட்டு பிள்ளை” என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இவருக்கும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் தம்பியான அல்லு ஷிரிஷைவை அனு இம்மானுவேல் நீண்ட நடக்கல காதலித்து வந்ததாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழும்பி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு முன்னர் கூட ஆக்ஸிஜன் திரைப்படத்தின் போது அனு இம்மானுவேலும் அப்படத்தின் இயக்குனர் எ.எம் ஜோதி கிருஷ்ணாவிற்கும் இடையில் கிசுகிசுக்கள் பேசப்பட்டது.

- Advertisement -

சர்ச்சைக்கு முடிவு :

இந்த விஷயத்தை பற்றி இருவரும் அனு இமானுவேலும் நடிகர் அல்லு ஷிரிஷைவும் எந்த ஒரு தகவலையும் சொல்லாத நிலையில் தற்போது அனு இம்மானுவேல் இது குறித்து விளக்கம் தெரிவித்துளார். அவர் கூறியது நான் “ஊர்வசிவோ ராக்ஷசிவோ” படத்தில் நடிக்கு வரை எனக்கு நடிகர் அல்லு ஷிரிஷைவை பற்றி தெரியாது. ஊர்வசிவோ ராக்ஷசிவோ படத்தின் பூஜையின் போதுதான் இப்படத்தில் நாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் பற்றி தேனீர் விடுதியில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்க்ள தான் வைரலாகி நானும் அல்லு ஷிரிஷைவும் காதலிப்பதாக வதந்தியை பரப்பியது எனக் கூறினார்.

என் அம்மா அழுத்துவிட்டார்:

மேலும் இந்த செய்தியை கேட்ட எனது அம்மா அழுத்திவிட்டார். என்னுடைய அம்மா அழுவதை பார்த்த எனக்கும் அது வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக காப்பி குடித்தால் கூட இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவுகிறது என்று கூறிய அனு இம்மானுவேல் நான் யாரையும் காதலிக்கவும் இல்லை யாருடனும் வாழவில்லை நான் இன்னமும் சிங்கிள் தான் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைவாழ்க்கையை ஆரம்பித்து மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பிஜு ஏன ஆரம்பித்து பவன் கல்யாண் நடித்திருந்த அங்யாதவாசி, நாகா சைதன்யா நடித்திருந்த ஷைலஜா ரெட்டி அல்லுடா , அல்லு அர்ஜுன் நீ பேரு சூர்யா, அல்லு ஷிரிஷை நடித்திருந்த ஊர்வசிவோ ராக்ஷசிவோ, ரவி தேஜா நடித்திருந்த ராவனசுரா என முக்கிய நடிகர்களுடன் நடித்து வரும் அனு இம்மானுவேல் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக கவனம் காட்டி வருகிறார்.

ஜப்பான் படம் :.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியுடன் இணைந்து “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படமானது இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாராக இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

Advertisement