40 வயது இயக்குனருடன் காதலில் விழுந்த அனு இம்மானுவேல் ? அட, இந்த நடிகரின் அண்ணனாச்ச்சே இவரு.

0
1532

40 வயது இயக்குனருடன் அனு இம்மானுவேல் டேட்டிங் சென்று வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தவர். இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரி படத்தில் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தை ஆப்ரிட் ஷைன் இயக்கினார்.ஆனால், இவர் அறிமுகமானது என்னவோ துப்பறிவாளன் படம் மூலம் தான்.தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தமிழ் மட்டுமல்லாது அம்மணி தெலுங்கிலும் பரிச்சியம் தான்.

இதையும் பாருங்க : மன்னிச்சிருப்பா, அப்பா கிட்ட பேசுப்பா – விஜய்யிடம் எஸ் ஏ சியின் உருக்கமான வேண்டுகோள் – ச்ச், இவருக்கா இப்படி. வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஜோதி கிருஷ்ணா என்று இயக்குனருடன் அனு இம்மானுவேலுக்கு நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருடன் டேட்டிங் சென்று வருதாகவும் தெலுங்கு வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கு சினிமாவில் மஞ்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த போது தான் இவருக்கும் இந்த படத்தை இயக்கிய ஜோதி கிருஷ்ணாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தற்போது இருவரும் காதலில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, பிரபல தயாரிப்பாளரான எம் ரத்னத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது சகோதரர் ரவி கிருஷ்ணா, தமிழில் கேடி, 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர். மேலும், இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, தமிழில் எனக்கு 20 உனக்கு 18, கேடி போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement