பும்ரா காதல் விஷயத்தில் மாறி மாறி பேசும் அனுபமா.! எது தான் உண்மை.!

0
9230
anupama
- Advertisement -

தமிழ் சினிமாவில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா, கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் பும்ராவுடனான காதல் குறித்து பேசியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

-விளம்பரம்-

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். இந்த நிலையில் அனுபமா பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வைரலானது.

இதையும் பாருங்க : வனிதா இந்த வாரம் எலிமினேஷன் இல்லை.! ஆட்டத்தை ஆரம்பித்த பிக் பாஸ்.!

- Advertisement -

பும்ராவுடன் அனுபமா இணைத்து பேசப்பட்டதிற்கு காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பூம்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.அதேபோல் பூம்ராவும், அனுபமா புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று முடிச்சு போட துவங்கி விட்டனர்.

சமீபத்தில் பும்ராவுடனான காதல் குறித்து பேசியுள்ள அனுபமா, நங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால், இருவரும் டேட்டிங் எல்லாம் சென்றது இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பும்ரா குறித்து பேசி இருந்த அனுபமா, பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை. நான் அவரை காதலிப்பதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பும்ரா, விஷயத்தில் அனுபமா மாறி மாறி பேசியுள்ளதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement