பல லட்சம் உயிர்களை விட பணம் முக்கியமா?அனுஷ்காவின் செயலால் ரசிகர்கள் எரிச்சல்.!

0
716
anushka-sharma
- Advertisement -

நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மைதானத்திற்கு வருவதால் தான் விராட் கோலி சரியாக ஆடுவது இல்லை என்ற சில சர்ச்சைகளும் கூட எழுந்தது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதியில் சிறு காகிதம் போட்ட நபரை பின் தொடர்ந்து வாக்கு வாதத்தில் கூட ஈடுபட்டது பெரும் சர்ச்சையாக வெடித்து. இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனுஷ்கா சர்மா.

- Advertisement -

பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் இவர், புதிதாக புகையிலை விளம்பர படமொன்றில் அவர் நடித்துள்ளார். அந்த விளம்பர வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அனுஷ்கா சர்மாவை கடும் கோபத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள்.

நீங்கள் புகையிலையை விளம்பரம் செய்தால் ரசிகர்களுக்கு வாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இறப்பதை விட உங்களுக்கு பணம்தான் முக்கியமா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் ஒரு டாக்டர் கேள்வி எழுப்பி உள்ளார். உங்கள் கணவர் தீங்கு ஏற்படுத்தும் எதையும் விளம்பர படுத்தமாட்டேன் என்கிறார். மனைவியோ புகையிலை விற்கிறார்” என்று இன்னொருவர் விளாசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement