நீண்ட இடைவெளிக்கு பின் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா - 40வது பிறந்தநாளில் வெளியான படத்தின் அறிவிப்பு.

By Rajkumar · 7/11/2021

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. அதோடு தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவும் அனுஷ்கா திகழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இரண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தான் அனுஷ்கா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். அதிலும் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த அருந்ததீ, பாகுபலி படங்கள் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

மேலும், பாகுபலி படத்தின் மூலம் இவர் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக மாறினார். கடைசியாக அனுஷ்கா அவர்கள் நடிகர் மாதவன் உடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து அனுஷ்காவின் படங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் முதலும், கடைசியும் மாதவன் படத்தில் தானா? உடல் எடை குறையவில்லையா? திருமணம் ஆக இருப்பதனால் நடிக்க வில்லையா? என்று பல விதமாக கமெண்டு போட்டு இருந்தார்கள்.

இதையும் பாருங்க : ரஜினி ஆதரவாளர் உள்குத்து, வெங்கட் பிரபுவின் ரிப்ளையால் கடுப்பாகி திட்டி தீர்க்கும் கமல் ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த மோசமான ஹேஷ் டேக்.

இந்த நிலையில் அனுஷ்கா அவர்கள் கதாநாயகியாக மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா அவர்கள் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அனுஷ்கா நடிக்கும் இந்த புதிய படத்தை யூவி கிரியேஷன் தயாரிக்கிறது. இது அனுஷ்காவின் 48வது திரைப்படமாகும்.

தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். மேலும், இன்று அனுஷ்கா அவர்களின் பிறந்தநாள் என்பதால் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அனைவரும் அனுஷ்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இன்று கமலஹாசன், வெங்கட் பிரபு ஆகியோருக்கும் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full