ரஜினி ஆதரவாளர் உள்குத்து, வெங்கட் பிரபுவின் ரிப்ளையால் கடுப்பாகி திட்டி தீர்க்கும் கமல் ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த மோசமான ஹேஷ் டேக்.

0
372
Venkat
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபுவை சோஷியல் மீடியாவில் கழுவிக் கழுவி ஊத்தும் கமல் ரசிகர்கள். ‘எச்ச பையன் வெங்கட் பிரபு’ என்ற ஹாஸ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் வெங்கட் பிரபு இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் வெங்கட்பிரபு அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இதனால் ரசிகர்கள் பலரும் நேற்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் போட்டு இருந்தார்கள்.

- Advertisement -

அந்த ரஜினி ரசிகரான மாயவரத்தான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை பிறந்த நாளை கொண்டாடும் தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட சகலகலா வல்லவர் வெங்கட்பிரபுவுக்கு முன்கூட்டியே என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த வெங்கட் பிரபு ஹிஹிஹி நன்றி சார்,அவ்ளோ பில்டப் பார்த்தவுடனே தப்பா என்ன டேக் பண்ணிட்டீங்க போலன்னு நினைச்சேன் அப்புறம்தான் உள்குத்து புரிஞ்சது’ என்று பதில் அளித்து இருந்தார். இதை எல்லாம் பார்த்த கமல் ரசிகர்கள் கொந்தளித்து போய் ‘#எச்சப்பய_வெங்கட் பிரபு’ என்ற ஹாஸ்டேக்கை சோசியல் மீடியாவில் போட்டு இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் வெங்கட்பிரபுவை போல இன்று கமல்ஹாசன் அவர்களும் பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெங்கட்பிரபுவை சகலகலா வல்லவன் என்று ரசிகர் ஒருவர் கூறியதற்கு கமல் ரசிகர்கள் கொந்தளித்து போய் வெங்கட்பிரபுவை கழுவி கழுவி ஊற்றியும், தாறுமாறாக டீவ்ட் போட்டும் இருந்தார்கள். இதைப்பார்த்து வெங்கட் பிரபு அவர்கள் என்றைக்குமே கமலஹாசன் தான் சகலகலா வல்லவன் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இன்று கமல் பிறந்தாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக வெங்கட் பிரபு பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஆனால், அந்தப்பதிவிலும் கமலுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனுஷ்கா, பாடகர் ஸ்ரீனிவாஸ், கார்த்தி என்று பலருக்கும் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

இதை பார்த்து மீண்டும் கடுப்பாகி இருக்கும் கமல் ரசிகர்கள், கமல் சாருக்கு மட்டும் தனியாக ஒரு பதிவை போட்டு வாழ்த்து சொல்ல முடியாதா என்று என்று மீண்டும் கழுவி ஊற்றி வருகின்றனர். பிறந்தநாள் அதுவுமாக வெங்கட் பிரபு இப்படி கமல் ரசிகர்களால் பெருத்த வசைக்கு உள்ளாகி இருக்கிறார்.

Advertisement