வாவ்அனுஷ்காவா இது .! குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே – ஷாக்கிங் ஸ்டில்ஸ்

0
1063
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் பரிட்சியமானார். அதன் பின்னர் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று ஒரு ரௌண்டு வந்தார்.

-விளம்பரம்-

அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

- Advertisement -

தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் செல்கின்றன.

எடை ஏறியதால் இனி அனுஷ்கா சினிமாவில் நடிக்க முடியாது. விரைவில் திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிடுவார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சமீபத்தில் அனுஷ்வின் புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அதில் முன்னை போல உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அனுஷ்கா.

-விளம்பரம்-
Advertisement