‘அட, உங்கம்மாவ நான்’ – அபூர்வ சகோதரர்கள் படத்தில் ‘ராஜா கைய வச்சா’ பாடலுக்கு முன் இடம்பெற இருந்த பாடல் இது தான் – வீடியோ இதோ.

0
965
kamal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர் கமலஹாசன். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் இவரை உலக நாயகன் என்று தான் அழைக்கிறார்கள். இவரின் வித்தியாசமான நடிப்பு திறமையின் மூலம் சினிமா துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மாபெரும் வெற்றியை கண்டு இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல் படம் வசூல் சாதனையை செய்தது என்றால் அது விக்ரம் படமாக தான் இருக்கும். இந்த படத்தின் வெற்றியால் மிகுந்த தெம்பில் இருக்கிறார் கமல்.

-விளம்பரம்-

கமல் எப்போதும் வித்யாசமான முயற்சிகளை கொடுப்பவர். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி, ஸ்ரீவித்யா, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. உலக திரைப்பட வரலாற்றிலேயே குள்ள தோற்றம் போட்டு நடித்தவர் கமலஹாசன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனாலேயே இந்த படத்திற்காக இவர் நிறைய விருதுகளை வாங்கி உள்ளார். இது நாள் வரை இந்த படத்தில் எப்படி கமல் குள்ளமாக நடித்தார் என்ற வியப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்து இருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் முதல் பாடலான ‘ராஜா கைய வச்சா’ பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், உண்மையில் ஆனால், அந்தப் பாடலுக்கு பதில் ‘அட உங்க அம்மா வா பார்த்த காலைத் தொட்டுக் கும்பிடுவேன்’ என்ற பாடல் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் நடிகை காந்திமதி அவர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை. அதே போல் நடிகை காந்தி மதி அவர்களும் நடிக்கவில்லை. கமல்ஹாசனுக்கு அம்மாவாக மனோரமா நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை ஆனால், இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் ஒளிபரப்பப் பட்டது என்று கூறப்படுகிறது.

Advertisement