எங்க அப்பா என்ன மோசடியாளரா ? அவர் செஞ்ச இந்த உதவிய எல்லாம் மறந்துட்டீங்களா ? ரஹ்மான் மகள் பகிர்ந்த பதிவு.

0
2451
ARRahman
- Advertisement -

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் குறித்து சோசியல் மீடியாவில் எழுந்து வரும் விமர்சனங்களுக்கு அவருடைய மகள் கதீஜா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான் பூதாகரம்பாக வெடித்து கொண்டு வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -
ARRahman

தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

தற்போது அந்த இசை கச்சேரி ஞாயிற்று கிழமை நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர்.

ரசிகர்கள் வருத்தம்:

மேலும், இந்த முறை திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என்று உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், கூட்டம் தான் ஆட்டு மந்தைகளைப் போல அதிகமாக இருந்தது. இது ரொம்பவே வருத்தத்தை அளிக்கிறது. அதோடு பல்லாயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் பல பேருக்கு நிகழ்ச்சியை பார்க்க அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்று இருக்கின்றனர். மேலும், ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய ஸ்கேம் செய்துவிட்டார். அவர் மோசடி மன்னன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

கதீஜா பதிவு:

இந்நிலையில் இதை பார்த்து கோபப்பட்ட ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், எங்க அப்பா என்ன மோசடி மன்னனா? எங்க அப்பா என்ன மிகப்பெரிய ஊழல்வாதி போல செய்திகள் போடுகிறீர்களே, சோசியல் மீடியாவில் திட்டி தீக்குறிங்களே, அவர் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கும் ரசிகர்களுக்கும் எவ்வளவு நல்லது செய்து இருக்கிறார். 2015ல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 2016 ஆம் ஆண்டு நெஞ்சே எழு என்ற நிகழ்ச்சியை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடத்தி இருந்தார். கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது 2018 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி அதன் மூலம் உதவி பெற்றுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார். திரைத்துறையில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் லைட் மேன் குடும்பங்களுக்கு உதவி செய்து இருக்கிறார் என்று மிகப்பெரிய பட்டியலை போட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement