உலகம் முழுவதும் உள்ள புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரகுமான் அவர்களும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாது இவர் இந்தியிலும் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் டெல்லி 6 திரைப்படமும் ஒன்று. இந்தியில் கடந்த 2009 ஆம் ஆண்டு அபிஷேக் மற்றும் சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘டெல்லி 6’ திரைப்படம் மாபெரும் தோல்வியடைந்தது. இந்த படத்தை ஓம் பிரகாஷ் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தோல்வியடைந்தாலும் இந்த படத்தின் இசை ஆல்பம் செம ஹிட் அடிக்க, அதிலும் குறிப்பாக மசக்கலி என்ற பாடல் ஹிந்தி பேசாதவர்களிடமும் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் வந்த கேந்தா பூல் என்ற பாடலை பாட்ஷா என்ற இசையமைப்பாளர் ரீமேக் செய்து டி சீரிஸ் யூ ட்யூப் சேனலில் வெளியிட, அதுவும் செம ஹிட் அடித்தது. இந்த நிலையில் இதே படத்தில் இடம்பெற்ற மசக்கலி பாடலை ரீ-மேக் செய்து நேற்று
(ஏப்ரல் 8) வெளியிட்டது டி சீரிஸ் நிறுவனம். ஆனால், கேந்தா பூல் ரீ-மேக் பாடல் அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெறவில்லை.

Advertisement

இதனால் மசக்கலி பாடலின் ரீ-மேக் மிக மோசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல ட்விட்டரில் #ARRahman மற்றும் #masakali2 என்ற இரண்டு ஹேஷ் டெக்குகளும் ட்ரெண்டிங்கில் வந்தது. மேலும், இந்த சமயத்தில் ஏ ஆர் ரஹ்மான் ட்விட்டரில் மசக்கலி பாடலின் ஒரிஜினல் வெர்ஷன் வீடியோ லிங்கை ப்கிர்ந்துள்ளார்.

அதில், குறுக்கு வழி கிடையாது 200 மேற்பட்ட இசையமைப்பாளர்கள் எழுதி எழுதி 365 நாட்கள் ஒரு தலைமுறைக்கு நிலைக்கும் ஒரு இசையை கொடுக்க மண்டையை குழப்பினோம். இயக்குனர் குழு இசையமைப்பாளர் பாடலாசிரியர் நடிகர்கள் நடன இயக்குனர்கள் மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பும் பிரார்த்தனையும் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

ஏ ஆர் ரகுமானின் இந்த பதிவு மசகலி பாடலையும் ரீமேக் செய்து அவர்களுக்கு தக்க பதிலடி என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஏ ஆர் ரஹ்மான், ரீ-மேக் விவகாரம் குறித்து பேசுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஓகே ஜானு என்ற படத்தில் ஹம்மா ஹம்மா என்ற பாடல் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. இது எனக்கு பிடித்திருந்தது.ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட என்னுடைய எந்த பாடலும் எனக்கு பிடிக்கவில்லை.

Advertisement

அதிலும் சில பாடல்கள் ரீமேக் செய்து இருப்பது எனக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. அந்த ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். உண்மையில் இந்த பாடல் ரீமேக் செய்து இருப்பதை நான் வெறுக்கிறேன். இப்படி ரீமேக் செய்யும் பாடல்களுக்கு நான் ஆதரித்தால் மக்கள் என்னை கிண்டல் செய்வார்கள். அதோடு ரீமேக் செய்து வெளியிடும் பாடல்கள் ட்ரெண்டிங் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமை விவாகரத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார் மேலும், அந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement