இந்த நேரத்துலா இந்த புரொமோஷன் தேவையா?– ஏ.ஆர்.ரகுமானை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

0
160
ARRahman
- Advertisement -

ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசியதில் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மீட்பு பணிகள்:

மேலும், நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். சென்னை வழியாக சென்ற மிக்ஜாம் புயல் ஆந்திரா மாநிலம் பப்பட்லா- ஓங்கோல் இடையே அதி தீவிர புயலாக நேற்று கரையைக் கடந்தது. மேலும் இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

விமர்சனத்திற்கு உள்ளான ஏ ஆர் :

அதுமட்டுமில்லாமல் உதவி தேவைப்படுபவர்களும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு உதவி கேட்டு வருகிறார்கள். இதனால் அரசு அதிகாரிகளும் விரைந்து உதவி செய்து வந்தார்கள். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் தனது பிப்பா படத்தில் இடம் பெற்ற மெய்ன் பர்வானா என்ற பாடலை பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்த்த பலருமே கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.

அதோடு மிக்ஸாம் புயலால் சென்னையே தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த பதிவு தேவையா? என்றெல்லாம் கிண்டலடித்தும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் படம் பீப்பா. இதில் இஷான் கட்டர், மிருனால் தாகூர், பிரியன்ஷு பைன்யுலி, லீசன் கரிமோவா, சோனி ரஸ்தான் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், மெய்ன் பர்வானா பாடல் வங்காளக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் என்பவரால் 1922 ஆம் ஆண்டு எழுதி இசையமைக்கப்பட்டது.

Advertisement