ஏ.ஆர் . ரகுமானுடன் கைகோர்க்கும் பிரபல நடிகரின் மகன் – அடடே , இயக்குனர் இவர் தானா !

0
1468
- Advertisement -

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் படத்தில் பிரபல நடிகரின் மகன் இணைந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

-விளம்பரம்-

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

- Advertisement -

ஏ.ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர் ரகுமான். இப்படி இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றிய படங்கள்:

சமீபத்தில் தான் இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் என்ற படத்தில் இவர் இசையமைத்து இருக்கிறார். இதனை அடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஏ ஆர் ரகுமான் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றும் படங்கள்:

தற்போது கமலஹாசன் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் ஏ ஆர் ரகுமான் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு கேஎச்234 என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புது படத்தில் ஏ ஆர் ரகுமான் கமிட்டாகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ் சமீபத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியாகியிருந்த படம் டாடா. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபி இயக்கி இருந்தார். முதல் படத்திலேயே இவர் பிரபலமான இயக்குனரார்.

ஏ ஆர் ரகுமான்-துருவ் விக்ரம் கூட்டணி:

இதனை அடுத்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்க இருக்கும் அடுத்த படத்தில் தான் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே, துருவ் விக்ரம் அவர்கள் வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement