‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் வென்றவுடன் பாராட்டுகள் ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், மறுபுறத்தில், ஆஸ்கர் விருது என்பதே பம்மாத்து; கோடிக்கணக்கில் லாபி செய்துதான் இதில் விருதுகளைப் பெறமுடியும்.  80 கோடிக்கு மேல் செலவு செய்துதான் இதை வாங்கியிருக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் கூடவே வருவதையும் காணமுடிகிறது. அதே போல நாட்டு நாட்டு பாடலை விட பல தகதியான பாடல்கள் இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து தகுதியான படங்கள் அனுப்பப்படுவது இல்லை என்று இசைப்புயல் கூறியுள்ளது பெரும் விவாதமாகி இருக்கிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், ஜெய் ஹூ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்திய சினிமாவிற்கு பெருமையை சேர்த்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஆர் ஆர் ஆர் மற்றும் தி எலிபண்ட் விஸ்பரர் (ஆவணப்படம்) ஆகிய படத்தின் மூலம் மீண்டும் இந்தியாவிற்கு பெருமை கிடைத்து இருந்தது.

Advertisement

 ஓவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் சில படங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பாக போட்டியிட குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ (Chhello Show) படம் தேர்வாகியுள்ளது. பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏற்கெனவே சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று சில விருதுகளைப் பெற்றது.

ஆனால், இந்த படத்திற்கு எந்த பிரிவிலும் விருதுகள் கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட ஆர் ஆர் ஆர் மற்றும் தி எலிபண்ட் விஸ்பரர் ஆகிய இரண்டிற்கு தான் ஆஸ்கர் விருது கிடைத்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஏ ஆர் ரஹ்மான் ””சில நேரங்களில் நமது திரைப்படங்கள் ஆஸ்கர் வரை செல்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதில்லை. அதே சமயம் சில தகுதியற்ற படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகின்றன.

Advertisement

அதை பார்க்கும் போது அதை அனுப்ப வேண்டாம் எனத் தோன்றும். சில சமயங்களில் மூன்றாவது நபர்கள் மூலம் தான் இங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அப்படி நடக்காமல் நேரடியாக நமக்கு தெரியும்படி இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்” என்றார். ரகுமானின் இந்த பேச்சு இந்த ஆண்டு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘செல்லோ ஷோ’ படத்தை குறிப்பிடுவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.

Advertisement

இவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இரண்டு ஆஸ்கர் வென்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த 127 ஹவர்ஸ் (127 Hours) படம் 83வது ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவில் நாமினேஷன் ஆனது. ஆனால் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement