தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து நான்கு பாகம் எடுத்து இருக்கிறார். இதில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சுந்தர் சி, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சுந்தர் சி யின் தங்கை தமன்னா. இவர் சந்தோஷ் பிரதாப் என்பதை காதலித்தார். இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு வந்ததால் வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டார்கள். பின் பத்து வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தங்கை தமன்னா தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன் சுந்தர் சிக்கு தகவல் கிடைக்கிறது. அதோடு தமன்னாவின் கணவர் சந்தோஷ் பிரதாப் நெஞ்சு வலியால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதை அடுத்து சுந்தர் சி தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு தன்னுடைய தங்கையும் அவருடைய கணவரும் எப்படி இறந்தார்கள்? தன்னுடைய தங்கையின் வீட்டில் இருக்கும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன? தங்கையின் குழந்தைகளை கொல்ல துடிப்பவர் யார்? தங்கையின் மகளை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கமான அரண்மனை படத்தில் வரும் பழிவாங்கல் பேய் கதை தான்.

இருந்தாலும் இந்த படத்தில் குத்து, டான்ஸ், காதல் கவர்ச்சி எல்லாம் இயக்குனர் தவிர்த்து இருப்பது நன்றாக இருக்கிறது. படத்தில் யோகி பாபு, வி டிவி கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ் ஆகியருடைய நகைச்சுவை இருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் காமெடிகள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரமாதமாக இல்லை. இதற்கு முன் வந்த படங்களில் அரண்மனையை வைத்து தான் கதை நடக்கும்.

Advertisement

இந்த படத்தில் அரண்மனை எந்த உணர்வு ஏற்படாத வகையில் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலமே இருட்டும், அரந்தகாடு தான். இடைவெளிக்கு முன் முதல் பாதியின் இறுதி விறுவிறுப்பாக செல்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் கே ஜி எஃப் கருடனாக நடித்த ராமச்சந்திரா ராஜி மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். இவர்களை அடுத்து பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் வந்த தமன்னாவிற்கு இந்த படத்தில் தாய் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

Advertisement

குழந்தைகளை காப்பாற்ற அவர் போராடும் உணர்வு அற்புதமாக இருக்கிறது. சொல்லப்போனால் படத்திற்கு பக்க பலமே தமன்னா. ராசி கண்ணாவிற்கு படத்தில் பெரிய வேலைகள் இல்லை. இருந்தாலும் அவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மேலும், வழக்கம் போல் சுந்தர் சி தன்னுடைய மனைவி குஷ்பூவையும் சிம்ரனையும் நடனமாட வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சாமி பாடல் பழைய அம்மன் படங்களை நினைவுபடுத்துகிறது. மொத்தத்தில் இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று அரண்மனை படத்தை பார்க்கலாம். ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

முதல் பாதி இறுதி நன்றாக இருக்கிறது. நகைச்சுவை ஓகே

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

எடிட்டிங் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

தமன்னா உடைய நடிப்பு சிறப்பு

குறை :

வழக்கமான பேய் கதை

கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கொஞ்சம் வேற மாதிரி காண்பித்து இருக்கலாம்

இயக்குனர் கதைக்களம் கொண்டு சென்ற இடத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

சில தேவையில்லாத கதாபாத்திரம்

மொத்தத்தில் அரண்மனை 4- ஒருமுறை பார்க்கலாம்

Advertisement