இப்போ என்ன போய் 'Wrestling'ல பேர் கொடுக்க போற - 44 வயது சீரியல் நடிகையின் பிட்னஸ் வீடியோவை கேலி செய்த நபர்.

By Rajkumar · 9/3/2021

தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வந்தார். அதே போல இவர் தமிழில் பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் கூட நடித்துளளார்.

44 வயதாகும் இவர் தற்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு கடினமான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி உடற் பயிற்சி வீடியோக்கள், நடன வீடியோக்கள் என்று பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் கூட பேலி நடனம் ஆடி அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : தம்பி அஜித்துக்கு வாழ்த்து - அஜித்தை பாராட்டி நாம் தமிழர் சீமான் போட்ட பதிவு.

சமீப காலமாக உடற் பயிற்சயில் தீவிரம் காட்டிவரும் இவர், சமீபத்தில் உடற் பயிற்சி செய்துவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ்ஸா என்று பாராட்டிய நிலையில் நெட்டிசன் ஒருவர் 'ஏன் இவ்ளோ கஷ்டப்படுறீங்க ? குத்துச்சண்டை போட்டிக்கு ஏதாவது பேர் கொடுக்க போறீங்களா' என்று கமன்ட் செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த பிரகதி, உங்களுக்கு எப்படி நெகட்டிவ் கமண்ட் செய்து Demotivate செய்வது லட்சியமாக பிட்னஸ் என்னுடைய லட்சியம். எனக்கு என்ன பிடிக்குமோ அதற்காக நான் வாழ்கிறேன். பிறர் என்னை விரும்புவதற்காக அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். அரண்மனை கிளி தொடருக்கு பின்னர் பிரகதி வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full