தம்பி அஜித்துக்கு வாழ்த்து – அஜித்தை பாராட்டி நாம் தமிழர் சீமான் போட்ட பதிவு.

0
631
seeman
- Advertisement -

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்தை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார்.அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அதே போல பல விதமான பொழுது போக்கில் ஈடுபட்டு வரும் அஜித் அதை கூட சீரியஸாக எடுத்துக்கொண்டு தான் பயிற்சி செய்வார். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் துறையில் சாதிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தல அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 46ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார். அதில் தற்போது சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க மெடல் வென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ஒன்றல்ல ரெண்டல்ல நடிகர் அஜித் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

இதையும் பாருங்க : கற்பழித்த ஒருவனை பெரியாரோடு ஒப்பிடுவதா – பேட்டியில் சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன். இதோ அந்த வீடியோ.

- Advertisement -

இதனால் பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அஜித்துக்கு சீமானும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர். சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். தம்பி அஜித் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப திகழும் தம்பி அஜித் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்தை பாராட்டி தமிழக துணை முதல்வர், பன்னீர் செல்வம் ட்வீட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement