பட்டாபட்டி, மடித்த வேஷ்டி. மாஸ்டர் பாடலுக்கு மகனுடன் ஆட்டம். அசத்திய அரண்மனைகிளி சீரியல் நடிகை.

By Rajkumar · 15/4/2020

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். விஜய் படம் என்றாலே போதும் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் பட நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : எம் ஜி ஆர் தன் தந்தைக்கு கொடுத்த பரிசு. தற்போது கையில் எடுத்துள்ள சிபிராஜ். என்ன தெரியுமா ?

மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி கொஞ்சம் தள்ளி போய் உள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம் பெற்று உள்ள 'வாத்தி கம்மிங்' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

https://www.instagram.com/p/B-4PYXTDSOe/

பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை பிரகதி தன்னுடைய மகனுடன் சேர்ந்து 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம குத்து டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கு நடிகை பிரகதி ஒரு குட்டி டவுசரை மாட்டிக்கொண்டு வெறித்தனமாக குத்தாட்டம் ஆடி உள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : கணவருக்கு கொரோனா அறிகுறி, பிறந்தநாளில் கணவரின் நிலை குறித்து கூறிய ஸ்ரேயா.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரா!! என ஆச்சரியத்துடன் உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தில் நடிகை பிரகதி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full