எம் ஜி ஆர் தன் தந்தைக்கு கொடுத்த பரிசு. தற்போது கையில் எடுத்துள்ள சிபிராஜ். என்ன தெரியுமா ?

0
7182
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் மகன் சிபிராஜ். 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’. இது தான் சிபிராஜ் ஹீரோவாக அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதில் சிபிராஜிற்கு ஜோடியாக ஷெரின் நடித்திருந்தார். ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்துக்கு பிறகு ‘ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் சிபிராஜ்.

-விளம்பரம்-

இதில் ‘ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், ஜாக்சன் துரை’ ஆகிய ஐந்து படங்களும் சிபிராஜிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த ஐந்து படங்களிலும் சிபிராஜின் தந்தையும், பிரபல நடிகருமான சத்யராஜும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சத்யராஜ் நிறைய படங்களில் வில்லனாக வலம் வந்தார். அதன் பிறகு தான் கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க துவங்கினார் சத்யராஜ்.

- Advertisement -

ஆகையால், சிபிராஜும் ஒரே ஒரு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘நாணயம்’. இதில் ஹீரோவாக பிரசன்னா நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்தார். தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிபிராஜ் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் தன் வீட்டில் ஒரு கர்லா கட்டையை வைத்து எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த கர்லா கட்டைக்கு ஒரு தனிக் கதை இருக்கிறது.

-விளம்பரம்-

‘ஜல்லிக்கட்டு’ என்ற படத்தின் 100-வது நாள் விழாவிற்கு பிரபல நடிகர் எம்.ஜி.ஆரை அழைப்பதற்கு, நடிகர் சத்யராஜ் அவரது வீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது, எம்.ஜி.ஆர் சத்யராஜிடம் “உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்ன வேண்டும் என்று சொல்” என்று கேட்க.. அப்போது சத்யராஜ் விரும்பி கேட்டு எம்.ஜி.ஆரிடம் இருந்து வாங்கியது தான் இந்த கர்லா கட்டையாம்.

Advertisement