திருச்சியில் பெரிய வீட்டை கட்டி வரும் அறந்தாங்கி நிஷா – வைரலாகும் ஹோம் டூர் வீடியோ.

0
718
- Advertisement -

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

-விளம்பரம்-

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 4ல் நிஷா :

மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சமியுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர்.

கேலிக்கு உள்ளான நிஷா :

அதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து பலரையும் காண்டாக்கியது. பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அர்ச்சனா மற்றும் நிஷாவின் பல செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். மேலும், இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது.

-விளம்பரம்-

நிஷா பங்களா கட்றாங்களா? :

தற்போது நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்படிபட்ட நிலையில் தான் சமீபத்தில் இவர் புது பங்களா வாங்கியதாக தகவல் பரவியதை அடுத்து, அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார் “அவர் கூறுகையில் ‘அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பெரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங். இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்….. சத்தியமா சொல்றேன் இது என் வீடு இல்லங்கோ’ என்றுபதிவிட்டு இருந்தார்.

video credit : karuppu Roja

புதிய வீடு கட்டும் நிஷா :

இந்த நிலையில் கருப்பு ரோஜா என்ற யூடியூபில் சேனல் ஒன்றை நடத்தி வரும் அறந்தாங்கி நிஷா தான் புதிய வீடு கட்டி வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நிஷா கூறியதாவது ” தான் சம்பாதித்து சிறுக சிறுக சேமித்த பணத்தை வைத்து வீடு கட்டி வருவதாகவும் விரைவில் அந்த பணி நிறைவடையும் என்றும் கூறியுள்ளார். மேலும் வீடு முழுவதும் கட்டி முடித்த பின்னர் உடனே அடுத்த வீடியோ வெளியிடப்படும் என்று அந்த விடியோவில் நிஷா அறிவித்துள்ளார்.

Advertisement