Bigg Boss வெற்றிக்கு பிறகு ஆரவ் போட்ட முதல் ட்வீட் என்ன தெரியுமா?

By Tamil Selvam · 1/10/2017
தமிழ் சினிமாவில் பெரிதும் அறிமுகம் இன்றி, பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டு இன்று பல கோடி தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளார் ஆரவ். விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் மட்டுமே இவரின் முகம் திரையில் தெரிந்தது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் சின்ன திரையில் நுழைந்தார் ஆரவ். பலதரப்பட்ட கடுமையான போட்டிகளுக்கு பிறகு, பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நின்று மக்களின் பேராதரவோடு பிக் பாஸ் சீசன் 1 டைட்டிலை பெற்ற இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்ட முதல் ட்வீட், " என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, இந்த விருதை நான் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்பது. இதோ அந்த ட்வீட்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full