காருக்குள் விழுந்த காங்க்ரேட் துண்டு.! நூலிழையில் உயிர் தப்பிய அரவான் பட நடிகை.!

By Rajkumar · 8/6/2019

தமிழில் ஆதி நடித்த அரவான் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அர்ச்சனா கவி. தமிழில் அரவான், ஞான கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் கவி. மலையாள முன்னணி நடிகையான இவர் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் அபிஷ் மாத்யூவை காதலித்தார். இருவரும் 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

இவர் தனது குடும்பத்தினருடன் கொச்சி விமான நிலையத்துக்கு காரில் நேற்று வந்துகொண்டிருந்தார். அவர்கள் வந்த கார், கொச்சி மெட்ரோ பாலத்துக்கு கீழே வந்தபோது, அதன் மீது பாலத்தில் இருந்து பெயர்ந்து, காங்கிரீட் துண்டு விழுந்தது. இதனா ல் அந்த டிரைவர், வண்டியை ஓரமாக நிறுத்தினார். பின்னர் காரை பார்த்தவருக்கு அதிர்ச்சி. முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது.

இதையும் படியுங்க : தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.! முதன் முறையாக விஜய்யுடன்.!

டிரைவர் இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் கான்கிரீட் துண்டு வந்து விழுந்துள்ளது. அதில் யாரும் அமராததால் காயம் ஏற்படவில்லை. டிரைவர் நிலை தடுமாறி காரை ஓரமாக நிறுத்தினார். கான்கிரீட் துண்டால் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதை பார்த்ததும் பின் இருக்கையில் இருந்த அர்ச்சனா கவியும், குடும்பத்தினரும் அதிர்ச்சியானார்கள். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

https://twitter.com/archana_kavi/status/1136282912389656577

உடைந்த கார் கண்ணாடி மற்றும் கான்கிரீட் துண்டை டுவிட்டரில் பதிவிட்ட அர்ச்சனா கவி, மெட்ரோ நிர்வாகம் டிரைவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதற்கு பதில் அளித்த மெட்ரோ நிர்வாகம், “இதுகுறித்து எங்கள் நிர்வாகம் விசாரித்து வருகிறது. டிரைவரையும் தொடர்புகொண்டு பேசினோம். இந்த சம்பவத்துக்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துஉள்ளார்.

.

Tamil Behind Talkies AMP · Quick view
View full