தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.! முதன் முறையாக விஜய்யுடன்.!

0
1284
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை ஏ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
Related image

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி வளம் வந்து கொண்டிருந்தது. விஜய்யின் 64 வது படத்தை ராஜா இயக்க போவதாக சில வெளியாகி இருந்தன. மேலும், தனது அடுத்த படத்திற்காக விஜய் சூப்பர் குட் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அதை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

Image result for Vijay 64

விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்க உள்ளதாக நம்பகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது விஜய்யின் 64 வது படத்தை பிரிட்டோ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சேவியர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகர் விஜய், சேவியருடன் இருக்கும் புகைப்படமும் அனிருத், சேவியருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை பரிசீலிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. . செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

Image result for rakul preet singh

ரகுல் ப்ரீத் சிங் இதுவரை தமிழில் கார்த்தி மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். எனவே, விஜய் 60 மூலம் விஜயுடன் முதன் முறையாக நடிக்க உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். விரைவில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement