திருநங்கையா நீ…! அப்போ ஆடையை கழற்றி நிருபினு சொன்னார் இயக்குனர் ! நடிகை வருத்தம்

0
2743
Sona Rathod

தெலுங்கு சினி உலகை சில நாட்களாக ஆட் டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில தினங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தண்ணனுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

sri reddy

ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி .இனிவரும் காலங்களிலும் இன்னும் நிறைய பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இவரை போன்றே தெலுங்கு சினிமாவில் பாலியல் தொல்லைக்கு ஆளான சில தெலுங்கு நடிகைகளும் ஸ்ரீ ரெட்டியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐத ராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு தெலுங்கு துணை நடிகைகள் கலந்து கொண்டனர் அதில் தெலுங்கு துணை நடிகைகள் சந்தியா மற்றும் சுனிதா ரெட்டி தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தெ ரிவித்திருந்தனர்.

Thirunangai

இந்நிலையில் நடிகைகளுக்கு தான் இது போன்ற தொல்லைகள் இருக்கிறது என்று பார்த்தால் அங்கே இருக்கும் திருநங்கைகளும் இதுபோன்ற இன்னல்களை சந்தித்துள்ளார்.தெலுங்கு திரை துறையில் இடம்பிடிப்பதற்கபா சோனா ரதூட் என்னும் திருநங்கை ஒரு ஆடிஷன் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இயக்குனர் நீ உண்மையான திருநங்கை தானா? ஆடையை கழட்டி காட்டி நிரூபி என கூறியதாக ஒரு பொது நிகழ்ச்சி மேடையில் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இன்னும் ஸ்ரீ ரெட்டி சர்ச்சையே ஓயாத இந்த நிலையில் திருநங்கை ஒருவர் தெலுங்கு கலை துறையில் இப்படி ஒரு அவலம் இருப்பதை தெரிவித்துள்ளது தெலுங்கு கலை துறைக்கு வந்துள்ள ஒரு அவலம் தான்.