அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த நடிகை..!வாய்ப்புக்காக ஆடிய நாடகம் அம்பலம்..!

0
420
Arjun

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

Shruthi arjun

இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

நடிகர் அர்ஜுனும், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது போலீசில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை ஸ்ருதி கூறிய பொய் ஒன்று போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.கடந்த சில மாதங்களாக நடிகை ஸ்ருதிக்கு திருமணம் ஆனதாக சில செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால், இந்த செய்தியை தொடர்ந்து மறுத்து வந்தார் நடிகை ஸ்ருதி, ஆனால், நடிகர் அர்ஜுன் மீது அளித்துள்ள புகாரில் நடிகை ஸ்ருதி, தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் தனது கணவர் பெயர் ராம் குமார் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதனால் பட வாய்ப்பிற்காக தனக்கு திருமணம் ஆனதையே மறுத்து இத்தனை நாட்கள் ஸ்ருதி நாடகமாடியுள்ளார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.