தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருள்நிதி. தற்போது அருள்நிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தேஜாவு. அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். திரில்லர் கதை களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அச்யுத் குமார், மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதுவரை அருள்நிதி நடிப்பில் வெளிவந்த பல படங்கள் திரில்லர் கதை களத்தில் வெளிவந்திருந்தாலும் தேஜாவு படம் வித்தியாசமான கதைகளை கொண்டுள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தின் கதை ஆசிரியராக சுப்பிரமணி இருக்கிறார். இவர் தான் எழுதும் கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் மனிதர்களாக வந்து தன்னை மிரட்டுவதாக காவல்துறையில் புகார் கொடுக்கிறார். இதைக்கேட்டு போலீசார் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். பின் அடுத்த நாள் போலீசுக்கு பெரும் அதிர்ச்சி ஊட்டும் விஷயம் ஒன்று நிகழ்கிறது. இதனால் சுப்பிரமணியை கைது செய்ய அவர் வீட்டிற்கு போலீஸ் வருகிறது.

Advertisement

இதையும் பாருங்க : என் முகத்துக்கு நேரா குண்டு பாய்ந்தது நான் எப்படி பிழைத்தேன் என்று கேட்ட எம் ஜி ஆர் – காரணம் சொன்ன தடவியல் நிபுணர் சந்திரசேகரன்.

அதாவது இவர் கதையில் எழுதி இருந்தது போல் பூஜா எனும் பெண் ஒருவர் 3 மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட பூஜா வேறு யாருமில்லை டிஐஜி ஆஷா ப்ரோமோதின்(மதுபாலா ) மகள். இதனால் இந்த விஷயம் ஊடகங்களில் சென்சேஷன் ஆகிறது. பின் தன்னுடைய மகன் கடத்தப்படவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் மதுபாலா கூறிவிட்டு மறைமுகமாக தன்னுடைய மகளை தேட துவங்குகிறார். இதற்காக அண்டர்கவர் அதிகாரியாக விக்ரமை நியமனம் செய்கிறார்.

Advertisement

இன்னொரு பக்கம் இதை அனைத்தையும் நேரில் இருந்து பார்த்தபடி அப்படியே கதையாக எழுதிக் கொண்டிருக்கிறார் சுப்ரமணி. இறுதியில் பூஜாவை விக்ரம் கண்டுபிடித்தாரா? இல்லையா? சுப்பிரமணி எழுதிய கதையின் முடிவு என்ன? கதையில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருக்கிறார். இவர் வழக்கம் போல் திரில்லர் கதையில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement

இவருடைய நடிப்பு நம்மை படத்தை விட்டு எங்கும் நகர விடாமல் பார்க்க வைக்கிருக்கிறது. இவரை அடுத்து வரும் மதுபாலா தன்னுடைய அனுபவ நடிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். கதாசிரியராக வரும் நடிகர் அச்யுத் குமார் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பூஜாவாக நடிகை ஸ்ம்ருதி வெங்கட் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். குறைவான காட்சிகளில் காளி வெங்கட் வந்திருந்தாலும் அனைவர் மனதிலும் பதிந்து விட்டார்.

அறிமுக இயக்குனராக இருந்தாலும் முதல் படத்திலேயே சிறந்த முயற்சியை இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் கையாண்டிருக்கிறார். அதிக எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு நல்ல படமாக தேஜாவு அமைந்திருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

நிறைகள் :

அருள்நிதி, அச்யுத் குமார் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

கதைக்களம், திரைக்கதை சூப்பர்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பு கூட்டும் வகையில் இருக்கிறது.

குறைகள் :

சில இடங்களில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் தேஜாவு- அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய திரில்லர் படமாக அமைந்திருக்கிறது.

Advertisement