என் முகத்துக்கு நேரா குண்டு பாய்ந்தது நான் எப்படி பிழைத்தேன் என்று கேட்ட எம் ஜி ஆர் – காரணம் சொன்ன தடவியல் நிபுணர் சந்திரசேகரன்.

0
2253
Mgr
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை, நடிகர் எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த எம் ஆர் ராதா அவருடைய வீட்டிற்கே நேரடியாக சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். அது மட்டுமல்லாமல் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.

-விளம்பரம்-

மருத்துவமனையில் கண்விழித்த எம்.ஜி.ஆர் தடவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் என்னுடைய முகத்திற்கு நேராக தோட்டாக்கள் வந்தது எப்படி உயிர் பிழைத்தேன் என்று கேட்டார். அதற்கு தடவியல் நிபுணர் சந்திரசேகரன் நான் எம்.ஆர்.ராதா துப்பாக்கி ரவைகளை ஆராய்ந்து பார்த்தேன். அந்த துப்பாக்கி ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது. அந்த துப்பாக்கி ரவைகளைய ஒரு சிறு பெட்டியில் போட்டு அடிக்கடி திறந்து மூடும் மேஜை டராயரில் போட்டு வைத்திருந்ததால். அந்தத் துப்பாக்கி ரவைகள் ஒன்றுடன் ஒன்று உருண்டு ரவையின் மேல் பிணைக்கப்பட்டு இருந்த கேட்ரேஜ் கேஸ் பிடிமானம் தளர்ந்து போய் இருந்தது. அதனால் தான் துப்பாக்கியால் சுட்ட பொழுது இரண்டு பேருக்கும் உயிருக்கும் ஒன்றாக வில்லை என்று தடவியில் நிபுணர் சந்திரசேகர் எம்.ஜி.ஆர் இடம் விளக்கி கூறினார்.

- Advertisement -

இதையும் பாருங்க : வாய்ஸ் சரியில்லை என வாய்ப்பை இழந்த கமல் – எந்த படம் தெரியுமா ? பின் நடித்தது யார் பாருங்க.

கைய்துசெய்யபட்டார் எம்.ஆர்.ராதா :-

துப்பாக்கி சூட்டில் பெருத்த காயம் அடைந்த எம்ஜிஆர் கழுத்தில் பலத்த மாவு கெட்டு போட்டு இருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரை புகைப்படம் எடுத்து சுவரொட்டியாக ஒட்டலாம் என்று ஆர்.எம் வீரப்பன் தெரிவித்தார். எம்ஜிஆரின் புகைப்படம் மற்றும் இடம் பெற்றிருந்த அந்த சுவரொட்டி திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது எம்.ஆர்.ராதா குணமாகி வந்தவுடன் கைது செய்யப்பட்டார். வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு என்னவெல்லாம் காரணம் என்று அரசு தரப்பு வக்கீல் தெளிவாகவே நீதிமன்றத்தில் விவரித்தார். எம்.ஆர்.ராதாவின் வக்கீல்லாக என்.டி.வானமாமலை ஆஜராகினார் எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர்க்கும் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

-விளம்பரம்-

இருவருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடு :-

தொழிலாளி படத்தின் சூட்டிங்கிள் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இவர்கள் நடிக்கும் ஒரு காட்சியில் இந்த பஸ் தான் இனிமேல் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று வசனம் இருந்தது. அதை எம்.ஜி.ஆர் இனி இதுதான் தொழிலாளர்களின் உதயசூரியன் என மாற்றி சொன்னார். இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா சினிமாவுக்குள் உன் கட்சியை கொண்டுவர கூடாது என கொந்தளித்தார். இதனால் ஏற்பட்ட சண்டையில் எம்.ஜி.ஆர் சூட்டிங் நிறுத்தினார் பிறகு தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து இந்த சண்டையை நிறுத்தி எம்.ஜி.ஆரை இந்த பஸ் தான் இனி தொழிலாளர்களை நம்பிக்கை நட்சத்திரம் என்றபடியே வசனம் பேச வைத்தார்.இது மட்டும் இல்லாமல் எம் ஆர் ராதா எழுதிய ஒரு கட்டுரையில் காமராஜரை கொல்ல சதி நடந்தது என்று எழுதினார். இதனால் நீண்ட மன உளைச்சலில் இருந்த எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவின் வளர விடாமல் பட வாய்ப்புகளை தட்டிச் சென்றார் என கூறப்படுகிறது.இதுவே இவர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு ஆகும் இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர் தான் என்னை சுட்டார் என தோசையை திருப்பி போட்ட எம்.ஆர்.ராதா :-

எம்.ஆர்.ராதா தான் தற்காப்புக்காக தான் எம்.ஜி.ஆரை சுட்டதாகவும் அவர்தான் முதலில் என்னை சுட்டாடர் என மாற்றி கூறியிருக்கிறார். ஆனால் தடவியல் நிபுணர் சந்திரசேகரனின் குழு மற்றும் வேறு சில துப்பாக்கி நிபுணர்களை வைத்து இருவரின் உடலில் பாய்ந்த குண்டு ஒரே துப்பாக்கிலிருந்து வந்ததாகவும் அதுவும் எம்.ஆர்.ராதா உபயோகப்படுத்திய துப்பாக்கி தான் என்று உறுதி செய்தார்கள். இதற்கு நேரடி சாட்சி தயாரிப்பாளர் வாசு தான். நேரடி சாட்சியான வாசு தெரிவித்தது ஏனென்றால் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் எம்ஜிஆர் ஒருமுறை சூட்டு விட்டு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக் கொண்டார் சுட்டு விட்டார் என கூறினார். ஆனால் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் அவர்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி வாசுவை பொய்சாட்சி செல்ல சொல்லி இருக்கிறார் என தெரிவித்தார்.

வெப்தொடராக மாறப்போகும் இந்தசம்பவம் :-

அதன் பிறகு இந்த வழக்கு விசாரணையில் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாகவும், அரசியல் விரோதமும் காரணமாக தான் இந்த சம்பவம் நடந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பின்னணியில் பல்வேறு விதமான காரணங்களும் சொல்லப்பட்டது. இறுதியில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் எம்.ஆர்.ராதா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதில் அவருடைய தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் அவர் விடுதலையானது குறிப்பிடப்பட்டது. இந்த சம்பவத்தை தான் தற்போது ராதிகாவின் ராடான் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

குறலை இழந்த எம்.ஜி.ஆர் :-

எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா இந்த தொடர் மூலம் அன்று என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைரின் மனதிலும் எழுந்துள்ளது. அதன் பிறகு இதிலிருந்து குணமாகி வந்த எம்.ஜி.ஆர் குரல் கனீர் குரலாக மாறிப் போனது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேடைப்பேச்சுகளும் அந்த சமயத்தில் அவர் நடித்த காவல்காரன் திரைப்படம் வெளிவந்த போதிலும் அப்படம் பெரும் வெற்றியடைந்தது. அவருடைய உடம்பிலிருந்து தோட்டாவின் சிறு பகுதியை எடுத்த போதிலும் கடைசி வரையிலும் எம்ஜிஆர் அந்த கனீர் குரல் மாற்றத்துடன் வாழ்ந்து வந்தார்.

Advertisement