கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ். ரசிகர்களை ஷாக்காக்கிய அருண் பாண்டியனின் மகள்.

0
92717
Keerthipandian
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல்வேறு வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமான வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான அருண்பாண்டியன் அம்மக்களும் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்

-விளம்பரம்-
View this post on Instagram

Beach Baby, always! ♥️ #favouriteplace #beach

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியன் சினிமாவில் வாய்ப்பு குறையவே பட தயாரிப்புகளில் இறங்கிவிட்டார். வில்லு, அங்காடி தெரு, முரட்டு காளை போன்ற பல்வேறு படங்களை தயாரித்த அருண் பாண்டியன், சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ படத்தை தயாரித்து இருந்தார். அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். அதில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்

- Advertisement -

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் நடித்த தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி பாண்டியன். ஹரிஷ் ராம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்த இந்த படம் குழந்தைகளை கவரும் வகையில் வைல்ட்  அட்வஞ்சர் படமாக உருவாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் இந்த படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. ஆனால், தும்பா படத்திற்கு பின்னர் வேறு எந்த பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

Advertisement