இந்த பிரபல நடிகரின் மகள் என்று சொல்லாமல் ஆடிஷனில் பங்கேற்றேன்.!

0
1626
Actor sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்ன் நடிகர் அருண் பாண்டியன். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்

-விளம்பரம்-

தற்போது தமிழ் சினிமாவில் தயரிப்பாளராக இருந்து வரும் நடிகர் அருண் பாண்டியன் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் “ஜூங்கா ” படத்தை தயாரித்துள்ளார். 90ஸ் தொடங்கி இன்று வரை மக்களுக்கு ஒரு பரிட்சியமான முகமாக இருந்து வரும் அருண் பாண்டியனின் குடும்பம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

- Advertisement -

அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். தற்போது சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார் அவருடைய மகள். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். 

கீர்த்தி நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பல ஆடிசன்களில் தான் யாரென்றே காட்டிக்கொள்ளாமல் கலந்து கொண்டுள்ளாராம்.
நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன என்று கூறியுள்ளார் கீர்த்தி.

-விளம்பரம்-

காமெடி அட்வென்சர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார். விஜய் டிவி தீனா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். இந்த படத்தில் VFX மற்றும் CGI ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

Advertisement