பிரபல சீரியல் வில்லியை காதலிக்கும் பாரதி கண்ணம்மா நாயகன் ? – யாருன்னு நீங்களே பாருங்க.

0
1138
arun
- Advertisement -

சமீப காலமாகவே சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்க்காக புதுப்புது வித்தியாசமான, கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வருகிறது. அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார்.

-விளம்பரம்-
barathi

கண்ணம்மாவாக முதலில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி தேவி அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வினுஷா இந்த தொடரில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. மேலும், இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

அதற்கு முன் பாரதியின் தம்பி அகிலன் விலகி இருந்தார். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி யில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியல் கதாநாயகன் பாரதி அவர்கள் சீரியல் நடிகை ஒருவரை காதலிக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் டிவியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Vijay Television Awards 2022 Winners | விஜய் டிவி விருதுகள்

விஜய் அவார்ட்ஸ்:

அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு மக்களை கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

வினுஷாவுக்கு கிடைத்த விஜய் அவார்ட்ஸ்:

கடந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விழா கூட சிறப்பாக நடந்து இருந்தது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா சமீபத்தில் தான் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் FInd Of The Year என்ற பட்டத்தை பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா தட்டி சென்றார். மேலும், கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் என்ற விருதை அருண் பிரசாத் வாங்கி இருந்தார். ஆனால், இந்த வருடம் எந்த விருதும் அவருக்கு கிடைக்கவில்லை.

அருண் பிரசாத் காதலிக்கும் நடிகை:

இந்நிலையில் இந்த விருது விழாவில் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது. அப்போது அவரை தொகுப்பாளர்கள் டாக்டர், பாரதி, டிஎன்ஏ போன்ற விஷயங்களை கூறி கிண்டல் செய்து இருந்தார்கள். இப்படி இவர்கள் கூறியதன் மூலம் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா? என்ற சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அருண்பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருந்த வீடியோக்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்த வண்ணம் உள்ளன. இதற்கு இருவரின் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement