17000 அடியில் உயரத்தில் இருந்து குதித்துள்ள அருண் விஜய். வீடியோவை வெளியிட சொல்லி வேண்டுகோள்.

By Rajkumar · 14/4/2020

திரையுலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து திரையுலகில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் அருண் விஜய்-க்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜயக்குமாரின் மகன் தான் அருண் விஜய். 1995-ஆம் ஆண்டு வெளி வந்த படம் 'முறை மாப்பிள்ளை'.

இது தான் அருண் விஜய் ஹீரோவாக அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து "பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி,துள்ளித் திரிந்த காலம், கண்ணால் பேசவா, அன்புடன், முத்தம், இயற்கை, ஜனனம், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தவம், வேதா, மலை மலை, துணிச்சல், மாஞ்சா வேலு, தடையறத் தாக்க" போன்ற பல படங்களில் அருண் விஜய் ஹீரோவாக நடித்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சுஜா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? அவரே சொன்ன தகவல்.

இதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அருண் விஜய் ஒரு பிரபல நடிகராக மாற வேண்டிய லக் அதன் பிறகு அடித்தது. ஆம்.. அந்த படம் தான் 'என்னை அறிந்தால்'. இதில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அருண் விஜய்-க்கு பவர்ஃபுல்லான வில்லன் ரோல். அதை கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு செய்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

https://www.instagram.com/p/B-8ujSjBpJf/

'என்னை அறிந்தால்' படத்துக்கு பிறகு "குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று" என அடுத்தடுத்து அருண் விஜய்யின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவியத் தொடங்கியது. இதில் 'மாஃபியா : அத்தியாயம் ஒன்று' என்ற படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அருண் விஜய் ஆர்யன், டெக்ஸ்டர் என டபுள் ஆக்ஷனில் மிரட்டியிருந்தார்.

இப்படம் அருண் விஜய்-க்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் அருண் விஜய் செம மாஸ் காட்டியிருந்தார். இன்று அருண் விஜய் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'மாஃபியா : அத்தியாயம் ஒன்று' படத்தில் வரும் டெக்ஸ்டர் கேரக்டரின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த புகைப்படம் நான் விமானத்தில் இருந்து 17,000 அடிக்கு மேல் இருந்து குதிக்கும் காட்சிக்கு முன்பாக எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய்.

இதையும் பாருங்க : என்னைத் தெரியாததுபோல சிவகார்த்திகேயன் பேசியதில்தான் வருத்தம் – புலம்பிய இயக்குனர்.

மேலும், இயக்குநர் கார்த்திக் நரேனிடமும், படத்தை தயாரித்த 'லைகா' நிறுவனத்திடமும், 'டெக்ஸ்டர்' வரும் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை தனது ரசிகர்களுக்காக வெளியிடும் படி கேட்டுக் கொண்டார். தற்போது, தமிழில் ''அக்னிச் சிறகுகள், பாக்ஸர், சினம் மற்றும் இயக்குநர் அறிவழகன் படம்" என அடுத்தடுத்து நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அருண் விஜய். இப்போது, 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், '144' போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full