பிக் பாஸ் சுஜா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? அவரே சொன்ன தகவல்.

0
1777
bigg-bos-Suja
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சுஜா வருணி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இவர் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதோடு ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸர் ஆகவும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து சுஜா வருணி பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சுஜா வருணி அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : என்னைத் தெரியாததுபோல சிவகார்த்திகேயன் பேசியதில்தான் வருத்தம் – புலம்பிய இயக்குனர்.

- Advertisement -

இதனால் நடிகை, நடிகர்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பதால் நடிகர்கள் நடிகைகள் எல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சுஜா வருணி அவர்கள் தன் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.

அதற்கு சுஜா வருணி கூறியிருப்பது, என்னுடைய முதல் சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் என்று கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் உங்களுடைய வெயிட் எவ்வளவு என்று கேட்டுள்ளார். அதற்கு சுஜா வருணி அவர்கள் 60 இருந்தேன் தற்போது 72 க்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இப்படி ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு நடிகை சுஜா வருணி பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இதை சுஜா வருணி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை, சுஜா வருணி திருமணம் செய்து கொண்டார். சிவகுமார் அவர்கள் தமிழில் 2008 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான சிங்கக்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

இதையும் பாருங்க : 29 ஆண்டுகளுக்கு முன் அஜித் நடித்த முதல் படம் இதான். வைரலாகும் வீடியோ.

அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு அழகான ஆண் பிறந்து உள்ளது.

Advertisement