mr லோக்கல் படத்தை மறைமுகமாக கலாய்த்த அருண் விஜய்.!

By Rajkumar · 18/5/2019

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (மே 17) வெளியாகியுள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படம். ஓகே ஓகே எஸ் எம் எஸ் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை அருண் விஜய் மறைமுகமாக கலைத்துள்ளார்.

https://twitter.com/arunvijayno1/status/1129479673618898945

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'சீமராஜா' திரைப்படம் வெளியான போது, அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்
நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்க : உருவாகிறது சுந்தரபாண்டியன் 2.! விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகர் தான்.! 

சமீபத்தில் அருண்விஜய் டுவிட்டரில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/bharath_sethu/status/1129566171416522752

https://twitter.com/rishivj711/status/1129480077031292929

https://twitter.com/car3_jayamravi/status/1129590412115447808

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் ட்ரைலர் வெளியான நேரத்தில் அருண் விஜய் இப்படி ஒரு ட்வீட் செய்ததால் சிவகார்த்திகேயனை தான் அருண் விஜய் கலாய்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அருண்விஜய் இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார்.

அதில் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. சற்றுமுன்புதான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். எனவே, தற்போது அருண் விஜய் செய்துள்ள இந்த டீவீட்டும் சிவாவைத் தான் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் கிளப்பி விட்டுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full