இயக்குனர் எஸ் ஆர் பிரகாரன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சசி குமாரின் நண்பராகவும், வில்லனாகவும் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் இந்திர குமார் நடிக்க உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் அடிப்படையில் ஒரு தயாரிப்பாளர். அருண் விஜய் நடிச்ச ‘குற்றம் 23’ படத்தைத் தயாரிச்சேன். இப்போ மகிழ் திருமேனி இயக்கத்துல ‘தடம்’ படத்தைத் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன்.
அடுத்து சசிகுமார்கூட ‘சுந்தரபாண்டியன் 2’ படத்தைத் தயாரிக்கிறதோட, அதுல ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன். என் முழு அடையாளம், தயாரிப்பாளர்தான். நடிக்கிறது எதார்த்தமா அமைஞ்சது. ‘குற்றம் 23’ படத்தோட ஒரு நிகழ்ச்சியை டி.வியில பார்த்துட்டு, சசிகுமார் ‘கொடிவீரன்’ படத்துக்கு வில்லனா நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் முத்தையாவிடம் சொல்லியிருக்கார்.
பின்பு சுந்தரபாண்டியன்’ படத்துல இருந்த நடிகர்கள் அப்படியே இதுலேயும் தொடருவாங்களா, மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு, விஜய்சேதுபதி இருப்பாரானு கேட்க வர்றீங்க. இந்தப் படத்துல நிறைய சர்பிரைஸ் இருக்கு. முதல் பாகத்துல விஜய்சேதுபதி நடிச்ச கேரக்டர்ல, இந்தப் படத்துல நான் நடிக்கிறேன். என்று கூறியுள்ளார்.