ரஜினி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அருணாச்சலம் படத்தின் போது சுந்தர் சிக்கு ரஜினி கொடுத்த டுவிஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கோலிவுட்டில் இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் ரஜினிகாந்த் கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியின் அருணாச்சலம் படம் குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படம் அருணாச்சலம்.

Advertisement

அருணாச்சலம் படம்:

இந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, மனோரமா, வடிவுக்கரசி, செந்தில், ரகுவரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்ற டயலாக்கின் மூலம் இளைஞர்களை தன் பக்கம் கட்டி போட்டார் ரஜினி.

படம் செய்த சாதனை :

மேலும், இந்த படம் திரையரங்கில் 175 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்திருந்தது. இந்த படம் உலக அளவில் 32.71 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதிலும் இந்தியாவில் 25.55 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. வெளிநாட்டில் மட்டும் ஏழு கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததாம். மேலும், இந்த படத்தை ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பேனரில் தயாரித்தார்.

Advertisement

படத்தின் கதை :

பெற்றோரை இழந்து வேறு வீட்டில் வாழும் ரஜினி, ஒரு கட்டத்தில் தான் ஒரு அனாதை என்பது தெரிந்து சென்னைக்கு வருவார். அங்கே எதிர்பாராதா விதமாக தனது தந்தை யார் என்ற உண்மை ரஜினிக்கு தெரியவரும். மேலும், கோடீஸ்வரனான ரஜினியின் தந்தை 30 நாளில் 30 கோடியை செலவு செய்தால் அவருக்கு 3000 கோடி சொத்து கிடைக்கும் என்று சவால் கொடுப்பார். அந்த சவாலில் ரஜினி வென்றாரா இல்லையா என்பதே மீதி கதை.

Advertisement

1985ஆம் ஆண்டே வெளியான படம் :

இந்த கதை 1902 ஆம் ஆண்டு வெளியான Brewster’s Millions என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஆனால், இதே கதையில் 1985ஆம் ஆண்டே Brewster’s Millions என்ற படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், தந்தை ரஜினி திரையில் பேசும் காட்சியை அப்படியே தமிழில் எடுத்து வைத்துள்ளார். அந்த காட்சியில் தந்தை ரஜினி இடையில் இரும்பும் போது உதவியாளர் ஒருவர் தண்ணீரை நீட்டுவார். அதற்கு ரஜினி no thanks என்று சொல்லுவார். அந்த காட்சி உட்பட சுந்தர் சி அப்படியே காப்பி அடித்து எடுத்து வைத்துள்ளார்.

Advertisement